தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சவுதி ஏர்போர்ட்டில் மீண்டும் தாக்குதல்

சவுதி ஏர்போர்ட்டில் மீண்டும் தாக்குதல்

சவுதி ஏர்போர்ட்டில் மீண்டும் தாக்குதல்


UPDATED : அக் 10, 2026 11:00 PM

ADDED : அக் 10, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 11:00 PM ADDED : அக் 10, 2026 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரியாத்: மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா தலைநகர் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடந்த ஏவுகணை தாக்குதலில் பயணியர் பலர் காயமடைந்தனர்.

மேற்காசிய நாடான சவுதியின் அண்டை நாடான ஏமனில் அரசுப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடக்கிறது. அதில் ஏமன் அரசு படைகளுக்கு சவுதி உதவிகளை செய்கிறது.

இதனால் சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுதி பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சவுதி வான்வெளியை தவிர்க்குமாறும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வாரத்தில் ரியாத் விமான நிலையம் ஏற்கனவே இருமுறை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். விமானம் ஒன்றும் பலத்த சேதமடைந்தது.

இந்நிலையில், நேற்று மீண்டும் ஹவுதி பயங்கரவாதிகள் ஏவிய ஏவுகணை விமான நிலையத்தில் வெடித்து சிதறியது. இதில் விமான நிலையத்துக்குள் இருந்த பலர் காயமடைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்துக்கு விரைந்தன. பயணியர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

தாக்குதலால் ரியாத் செல்லவிருந்த விமானங்கள் சில திருப்பி விடப்பட்டன. ‘ஏர் இந்தியா’ உட்பட பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தலைநகரில் தாக்குதல் நடந்திருந்தாலும் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய எரிசக்தி மற்றும் முதலீட்டு மாநாடுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us