தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு மேலும் ஒருவர் பிடிபட்டார்

 தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு மேலும் ஒருவர் பிடிபட்டார்

 தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு மேலும் ஒருவர் பிடிபட்டார்


ADDED : மே 02, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டிகர்: பஞ்சாபில், ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா ஷம்புவில் கடந்த மாதம் 27ம் தேதி இரவு சரக்கு ரயில் தண்டவாளத்தில் வழித்தடத்தில் வெடிகுண்டு வெடித்தது.

பஞ்சாப் போலீசின் அமிர்தசரஸ் மாநில சிறப்பு நடவடிக்கைப் பிரிவு, பாட்டியாலா போலீஸ் மற்றும் பதான்கோட் உளவுப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர விசாரணை நடத்தின.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குழுவில் ஜக்ரூப் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், குர்ஜிந்தர் சிங் என்ற பாபா பியந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஷம்பு ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு மட்டுமின்றி, சிர்ஹிந்த் ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு மற்றும் மோக சி.ஐ.ஏ., அலுவலகம் மீது கையெறி குண்டு வீசியது ஆகியவற்றிலும் குர்ஜிந்தருக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us