தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா; அதிர்ச்சியில் மம்தா

திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா; அதிர்ச்சியில் மம்தா

திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா; அதிர்ச்சியில் மம்தா

6


ADDED : ஜூன் 10, 2026 12:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 12:59 PM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சுஷ்மிதா தேவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், ஒரே வாரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்பி ராஜினாமா செய்திருப்பது மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த பிறகு, திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிராக சுமார் 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அக்கட்சியின் எம்பிக்களும் பாஜவுக்கு தாவ தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியது.

இது திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சுகேந்து சேகர் ராய் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று ராஜ்யசபா எம்பி சுஸ்மிதா தேவும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகின்றது

தனது பதவியை ராஜினாமா செய்த சில நிமிடங்களிலேயே சுஷ்மிதா தேவ், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை நேரில் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் விரைவில் பாஜவில் இணையக்கூடும் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

யார் இந்த சுஷ்மிதா தேவ்?

அசாமின் சில்சார் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்பியான சுஷ்மிதா தேவ், கடந்த 2019 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பு வகித்ததுடன், கட்சியின் முக்கிய நிர்வாகியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us