அந்துமணி யார் பக்கம்?: அரசு பக்கமா? அரசியல்வாதிகள் பக்கமா?
அந்துமணி யார் பக்கம்?: அரசு பக்கமா? அரசியல்வாதிகள் பக்கமா?
UPDATED : நவ 11, 2026 04:21 AM
ADDED : நவ 11, 2026 04:18 AM

அமைச்சர்கள் அளவில் மனமாற்றம் வந்தால் போதாது. துறை சார்ந்த அலுவலகங்களில், எல்லா நிலையிலும், அலுவலர்களிடம் நேர்மை வேண்டும். அதை முதல்வர் விஜய், கண்டிப்புடன் செயல்படுத்துவார் என்று நம்புவோம்.
ஆங்கிலத்தில், 'கான்கிரீட் ஜங்கிள்' என்பரே... அதுபோல் பசுமையே இல்லாத, குழந்தைகள் ஓடி விளையாட இடம் இல்லாத, எங்கும் கட்டடங்களும், அதிக நெரிசலான சாலைகளுமே கொண்ட நவீன நகரமாக மாறி வருகிறது சென்னை. அதை மீட்டெடுக்க கொண்டு வரப்படும் இந்த திட்டம் வரவேற்கத்தக்கதே!
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், அவரை கொண்டாடுவரே... அந்த இளநிலை பொறியாளர் போல் அவரது உயரதிகாரிகளும் செயல்பட்டால், தமிழகத்திற்கு நல்லது. அவரை தண்ணியில்லா காட்டிற்கு மாற்றாமல் இருந்தால் சரி!
நம்மூர் அரசியல்வாதிகளும் இப்படி திருமணம் செய்து வைப்பரே, மக்கள் வரிப்பணத்தில்!
உணவு பதப்படுத்தும் தொழிலால் பல விவசாயிகள் பயன் பெறுவர்; நம் விளை பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படும். ஆண்டு முழுதும் நமக்கு தேவையான விளைபொருட்கள் கிடைக்கும். இது ஒரு நல்ல முன்னெடுப்பு. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமல் சாலைகளில், ஏரி, குளங்களில் கொட்டுவதும் தடுக்கப்படும்.
அந்துமணி என்றுமே வாசக முதலாளிகள் பக்கம் தான் என்று உங்களுக்கு நன்கு தெரியுமே முத்துாஸ்!
சரியான கேள்வி... இதை படித்த பின்னாவது அரசும், நீதிமன்றங்களும் துரிதமாக செயல்பட்டு, சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
