தலித் விரோத காங்கிரஸ் அரசு பா.ஜ., - எம்.பி., முனிசாமி ஆவேசம்
தலித் விரோத காங்கிரஸ் அரசு பா.ஜ., - எம்.பி., முனிசாமி ஆவேசம்
ADDED : பிப் 24, 2024 04:00 AM

தங்கவயல் : ''அம்பேத்கர் நினைவு அருங்காட்சியகம் அமைக்க ஒதுக்கிய இடத்தை, வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள சித்தராமையா தலைமையிலானகாங்., அரசு, தலித் விரோத அரசு,'' என்று கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி குற்றம் சாட்டினார்.
கர்நாடக மாநிலத்தில்அம்பேத்கர் வந்து சென்ற இடங்களில், அவரின்நினைவாக அருங்காட்சியகம் அமைக்க,பா.ஜ., அரசில் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு, ஐந்து இடங்களை தேர்வு செய்தது.
ஒவ்வொரு இடத்திற்கும் தலா 5 ஏக்கர் நிலமும், 2 கோடி ரூபாயும் வழங்கியது. அதில் தங்கவயலில் பெமல் நகர் பகுதியில் இடம் தேர்வு செய்தனர். அதற்கான போர்டும் வைக்கப்பட்டது.
இந்நிலையில்,கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா, அந்த இடத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இத்தகவல் கோலார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாரில் பா.ஜ., - எம்.பி., முனிசாமிகூறியதாவது:
சட்டபிதா அம்பேத்கர் பிறந்த இடம், வாழ்ந்த இடம், மறைந்த இடம், வந்து சென்ற இடம்ஆகிய இடங்களில் நினைவிடம், அருங்காட்சியகம் ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஆணை பிறப்பித்திருந்தார்.
அவரின் ஆணையை ஏற்று, கர்நாடக பா.ஜ., அரசின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநிலத்தில் ஐந்து இடங்களை தேர்வு செய்தார். தலா 5 ஏக்கர், 2 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.
அதன்படி தங்கவயலில் பெமல் நகர் பகுதியில், இடமும் நிதியும் வழங்கப்பட்டது. ஆனால், சித்தராமையா தலைமையில் உள்ள காங்கிரஸ் அரசு அதை வாபஸ் பெற்றுள்ளது.
அம்பேத்கர் கொள்கைக்கு காங்கிரஸ் நேர் எதிரியாக செயல்படுகிறது. அம்பேத்கர் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செயலை தான் சித்தராமையா அரசு செய்து வருகிறது.
பா.ஜ., அரசு ஒதுக்கிய இடத்தில் தான்அம்பேத்கர் நினைவு அருங்காட்சியகம் உருவாக்க வேண்டும். அதற்காக ஒதுக்கிய பணத்தை வேறு திட்டங்களுக்கு ஒதுக்க கூடாது.
இதற்காக, பெங்களூரு விதான் சவுதா முன் உள்ள அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், தங்கவயல் தலித் கூட்டமைப்பை சேர்ந்த ஏ.பி.எல்.ரங்கநாதன், எஸ். அன்பரசன், கருணாமூர்த்தி, தாஸ், மஞ்சுநாத் உட்பட பலர் நேற்று தங்கவயல் தாசில்தாரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், 'அரசு திட்டமிட்டப்படி ஏற்கனவேஒதுக்கிய இடத்தில்லேயேஅம்பேத்கர் நினைவு அருங் காட்சியகம் ஏற்படுத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் இடமாற்றம் செய்ய கூடாது' என்று வலியுறுத்தி உள்ளனர்.