உள்ளடக்கத்திற்கு செல்ல

டிரோன் எதிர்ப்பு அமைப்பு பர்கவஸ்திரா: பொக்ரானில் நடந்த சோதனை வெற்றி
டிரோன் எதிர்ப்பு அமைப்பு பர்கவஸ்திரா: பொக்ரானில் நடந்த சோதனை வெற்றி
ADDED : நவ 26, 2026 06:59 PM

அ நிறம் | அளவு
சோலார் டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற உள்நாட்டு நிறுவனம், வாகனத்தில் பொருத்தப்பட்ட, எதிர்ப்பு அமைப்பு பர்கவஸ்திராவை உருவாக்கி உள்ளது.
இது வான் பாதுகாப்பு ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை இணைத்து டிரோன் அச்சுறுத்தல்களை சமாளிக்கும். இந்தியாவில் முதல்முறையாக வடிவமைக்கப்பட்ட டிரோன் எதிர்ப்பு அமைப்பு இதுவாகும்.
ராஜஸ்தானின் பொக்ரானில் இந்த அமைப்பு வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. நவம்பர் 20 முதல் 24 வரை நடந்தது.
இது எதிரி நாடுகளின் டிரோன்களுக்கு எதிராக இரு அடுக்கு பாதுகாப்பை இந்த அமைப்பு அளிக்கிறது. மேலும் ஒரே நேரத்தில் பல டிரோன்களை தாக்கும் திறனையும் கொண்டுள்ளது.
