நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: 5 ஆண்டில் படையினர் 207 பேர் வீர மரணம்
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: 5 ஆண்டில் படையினர் 207 பேர் வீர மரணம்
ADDED : ஆக 07, 2024 12:20 PM

புதுடில்லி: கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட்டுகளுக்கு எதிரான போரில், பாதுகாப்பு படையினர் 207 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
லோக்சபாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறியதாவதாவது: 2010ல் இருந்து பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் 73% குறைந்துள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2024ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், 207 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர்.
மாரடைப்பு போன்ற மருத்துவ காரணங்களால், பணியில் இருந்த போது, 577 மத்திய ஆயுதக் காவல் படையினர் உயிரிழந்தனர்.
நக்சலைட் தாக்குதல்
சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தற்கொலை செய்வதை தடுக்கவும், சிறந்த மன ஆரோக்கியத்திற்காகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 2013ல் 126 மாவட்டங்களில் நக்சல் தாக்குதல் சம்பவம் அதிகம் நடந்தன. தற்போது 38 மாவட்டங்களில் மட்டும், சில இடங்களில் நக்சல் தாக்குதல் சம்பவம் நடக்கிறது. இதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.