நக்சல் ஒழிப்பு நடவடிக்கை எதிரொலி; சத்தீஸ்கரில் 9 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 51பேர் சரண்!
நக்சல் ஒழிப்பு நடவடிக்கை எதிரொலி; சத்தீஸ்கரில் 9 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 51பேர் சரண்!
ADDED : அக் 29, 2025 09:47 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 9 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 51பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று (அக்., 29) பிஜாப்பூரில் 9 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 51பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். அவர்களில் 20 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.65 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய நிலையில், நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கை, வீரர்களின் துணிச்சல் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இது அமைந்துள்ளது. ஜனவரி 2024ம் ஆண்டு முதல் தற்போது வரை பீஜாப்பூரில் நக்சலைட்டுகள் 650 பேர் சரணடைந்துள்ளனர்.196 பேர் என்கவுன்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 986 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பஸ்தர் மலைத்தொடரின் கான்கர் மாவட்டத்தில் நக்சல் அமைப்பின் தளபதி, 13 பெண் நக்சலைட்டுகள் உட்பட மொத்தம் 21 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

