நக்சல் ஒழிப்பு நடவடிக்கை இறுதி கட்டம்; சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் சரண்
நக்சல் ஒழிப்பு நடவடிக்கை இறுதி கட்டம்; சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் சரண்
UPDATED : பிப் 17, 2026 10:03 PM
ADDED : பிப் 17, 2026 09:30 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 22 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.
நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வேகமெடுத்து உள்ளது. நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையில், நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நக்சலைட்டுகள் சரணடையும் நிகழ்வுகளும் நடக்கிறது. அமைதி பாதையில் திரும்பும் நக்சலைட்டுகளுக்கு அரசு நிதி உள்ளிட்ட உதவிகளையும் செய்து கொடுக்கிறது. அந்த வகையில் இன்று (பிப்ரவரி 17) சுப்மா மாவட்டத்தில் ஒரு பெண் உட்பட நக்சலைட்டுகள் 22 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
நக்சலைட்டுகள் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருவதாக அவர் கூறினர். சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் அரசின் கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2025ம் ஆண்டில் சத்தீஸ்கரில் 1,500க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரணடைந்து இருக்கின்றனர்.

