அன்வர் மானப்பாடி 'யு டர்ன்' சிவகுமார் குற்றச்சாட்டு
அன்வர் மானப்பாடி 'யு டர்ன்' சிவகுமார் குற்றச்சாட்டு
ADDED : டிச 17, 2024 04:58 AM

பெலகாவி: ''அரசியல் நெருக்கடியால், சிறுபான்மை பிரிவுகள் ஆணைய முன்னாள் தலைவர் அன்வர் மானப்பாடி யு டர்ன் அடித்துள்ளார்,'' என துணை முதல்வர் சிவகுமார் குற்றம்சாட்டினார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிறுபான்மை பிரிவுகள் ஆணைய முன்னாள் தலைவர் அன்வர் மானப்பாடி தன் பேச்சை மாற்றியுள்ளார். அவர் பேசியது ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியானதை நான் கவனித்தேன். பல விஷங்களை அவர் கூறியுள்ளார். இவர் கூறியதை முதல்வர் சித்தராமையா சுட்டி காண்பித்தார்.
ஆவணங்கள் எங்கும் போகவில்லை. நாங்கள் ஆவணங்களை வெளியிடும் முன், அன்வர் மானப்பாடியே அந்த ஆவணங்களை வெளியிடட்டும். விசாரணை நடத்தும்படி அரசுக்கு கடிதம் எழுதட்டும். நாங்களும் இது பற்றி ஆலோசிப்போம்.
வக்பு வாரிய சொத்து முறைகேடு தொடர்பான அறிக்கையை மூடி மறைக்க, காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் ஆசை காட்டுவதாக அன்வர் மானப்பாடி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் முன்னரே ஏன் கூறவில்லை. இப்போது கூறுவதால் என்ன பயன். பதவியில் இருக்கும் போது, என்ன சொல்கிறோமோ அதுவே முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

