ADDED : செப் 13, 2011 08:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத் : அமைச்சர்கள் தங்களது சொத்து கணக்கை தெரிவிக்க விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்திருப்பதாக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டிதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பிரதமர் மன்மோகன் சிங், தனது சொத்துக் கணக்கை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஆந்திர அமைச்சர்களும் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்றும், இதற்கு ஆகஸ்டு மாதம் 30ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில், மொத்தமுள்ள 38 அமைச்சர்களில், 10 அமைச்சர்கள் இதுவரை, சொத்துக் கணக்கை வெளியிடவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரெட்டி, இன்னும் 2 வாரங்களுக்குள், அந்த அமைச்சர்கள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.