தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அப்பாச்சி., வந்தாச்சி

அப்பாச்சி., வந்தாச்சி

அப்பாச்சி., வந்தாச்சி


UPDATED : ஜூலை 22, 2025 03:03 PM

ADDED : ஜூலை 22, 2025 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2025 03:03 PM ADDED : ஜூலை 22, 2025 11:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அமெரிக்காவின் அதி நவீன போர் ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று இந்தியா வந்து சேர்ந்தது. உபி., மாநிலம் ஹிண்டன் விமானபடை தளத்தில் வந்து இறங்கியது. இன்னும் 2 நாட்களில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். ஒரு நிமிடத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று 128 இலக்குகளை தாக்கும்.

அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது.

2015ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவுடனான ரூ.13,952 கோடி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.



உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டர்களில் சக்தி வாய்ந்தது AH-64E என்னும் அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர். இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கிறது. கூடுதலாக மேலும் 6 ஹெலிகாப்டர்களை வாங்க, கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.5,171 கோடியில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், முதற்கட்டமாக, 3 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் இன்று ஜூலை 22ம் தேதி வந்து சேர்ந்தது.

அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், எகிப்து ஆகிய நாடுகள் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பயன்படுத்த வருகிறது. தற்போது இந்தியாவும் தனது வலிமையை பெருக்கி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us