மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து; 3 பேர் பலி; 25 பேர் மாயம்
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து; 3 பேர் பலி; 25 பேர் மாயம்
ADDED : ஆக 27, 2025 07:42 AM

மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் 25க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள விரார் கிழக்கில் ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் ஒரு பகுதி இன்று இடிந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் மாயம் ஆகி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.