ADDED : பிப் 04, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய அரசின் சுகாதாரத் துறைச் செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அபூர்வ சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது: உயர்மட்ட அதிகாரத்துவ மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலராக பணியாற்றி வந்த அபூர்வ சந்திரா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஞ்சய் ஜாஜு, தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களை தவிர, மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் அமைப்பிலும் 8 மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.