மஹா., ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பார்வையாளர்கள் நியமனம்: காங்., உஷார்
மஹா., ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பார்வையாளர்கள் நியமனம்: காங்., உஷார்
ADDED : நவ 22, 2024 10:28 PM

புதுடில்லி: மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்து உள்ளது.
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கூட்டணி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரு மாநிலங்களிலும் மேலிட பார்வையாளர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமித்து உள்ளார்.
இதன்படி மஹா., மாநிலத்திறகு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் ஜி.பரமேஸ்வரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில பார்வையாளர்களாக தாரிக் அன்வர், மல்லு பாட்டி விக்ரமார்கா மற்றும் கிருஷ்ணா அலவரு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில், தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள காங்கிரசும் கூட்டணி கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. நாளை மும்பை செல்கிறோம். ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக புகார்கள் வந்தன. ஆனால், இந்த முறை நாங்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளோம். மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.