சிவில் பாதுகாப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி., தமிழர் ஹரிசேகரன் நியமனம்
சிவில் பாதுகாப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி., தமிழர் ஹரிசேகரன் நியமனம்
ADDED : ஜன 01, 2024 06:36 AM

பெங்களூரு: சிவில் பாதுகாப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக, தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி, ஹரிசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கியும், புதிய பொறுப்புகளில் நியமித்தும் அரசு உத்தரவிட்டு உள்ளது.
l ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஜி.பி., கமல்பந்த், தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள், ஊர்காவல்படை, மாநில பேரிடர் பொறுப்பு குழு டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
l போலீஸ் பயிற்சி பள்ளி ஏ.டி.ஜி.பி., அலோக்குமாருக்கு, கர்நாடகா சாலை பாதுகாப்பு ஆணைய சிறப்பு கமிஷனராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
l கர்நாடகா ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி., சீமந்த்குமார் சிங்கிற்கு, பெங்களூரு மெட்ரோபாலிடன் டாஸ்க் போர்ஸ் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
l கர்நாடகா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை பிரிவு ஏ.டி.ஜி.பி., ஹரிசேகரன், ஊர்காவல் படை, சிவில் பாதுகாப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
l கிழக்கு மண்டல டி.ஐ.ஜி., தியாகராஜனுக்கு பதவி உயர்வு வழங்கி, கிழக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் உட்பட 36 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் அரசு உத்தரவிட்டு உள்ளது.