அமைச்சர் கன்னத்தை தடவிய மூதாட்டி கிரஹலட்சுமி திட்டத்திற்காக பாராட்டு
அமைச்சர் கன்னத்தை தடவிய மூதாட்டி கிரஹலட்சுமி திட்டத்திற்காக பாராட்டு
ADDED : மார் 04, 2024 07:13 AM

பெலகாவி: கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், 2,000 ரூபாய் கொடுப்பதற்கு, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் கன்னத்தை தடவி, மூதாட்டி நன்றி கூறினார்.
கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், செயல்படுத்திய ஐந்து வாக்குறுதி திட்டங்களில், 'கிரஹ லட்சுமி'யும் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் குஷியடைந்துள்ளனர்.
பெலகாவி ரூரல் தொகுதியின், ஹிரேபாகேவாடி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் வந்திருந்தார்.
நிகழ்ச்சிக்கு செல்லும் போது, வீட்டின் எதிரே நின்றிருந்த மூதாட்டியை கண்ட அமைச்சர், 'உங்களுக்கு கிரஹலட்சுமி திட்டத்தின் 2,000 கிடைக்கிறதா, அதை என்ன செய்கிறீர்கள்' என அன்போடு விசாரித்தார்.
இதற்கு பதிலளித்த மூதாட்டி, அமைச்சரின் கன்னத்தை தடவி, 'உங்கள் தயவால், என் வீட்டில் அனைவரும் வயிறு நிரம்ப உணவு சாப்பிடுகிறோம். இந்த திட்டம் எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது' என புகழ்ந்து வாழ்த்தினார்.

