மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல்
மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல்
UPDATED : அக் 04, 2024 12:40 AM
ADDED : அக் 03, 2024 09:36 PM

புதுடில்லி: மேலும் ஐந்து மொழிகளுக்கு செம்மொழிகளுக்கு அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு காங்., தலைமையில் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சியின் போது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. பின் 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.
இந்நிலையில் இன்று( அக்.,03) பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது . ஏற்கனவே ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன. தற்போது 5 மொழிகள் என செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகள் எண்ணிக்கை 11 ஆக உயருகிறது.