தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஏப்., சரக்கு ஏற்றுமதி 14% உயர்வு

 ஏப்., சரக்கு ஏற்றுமதி 14% உயர்வு

 ஏப்., சரக்கு ஏற்றுமதி 14% உயர்வு


ADDED : மே 16, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 07:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் சரக்கு ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி பாதையில் துவங்கியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஏப்., மாதத்தில் இது, 13.78 சதவீதம் அதிகரித்து 4.14 லட்சம் கோடி ரூபாயானது.

ஏப்ரல் மாதத்துக்கான வர்த்தக தரவுகளை, மத்திய வர்த்தக அமைச்சக செயலர் ராஜேஷ் அகர்வால் நேற்று வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், சர்வதேச அளவிலான சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் ஏற்றுமதி, வளர்ச்சி பாதையில் தொடர்வதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த மாதம் இறக்குமதியும் கணிசமாக உயர்ந்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை 2.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய மார்ச் மாதத்தில், 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட 95 லட்சம் கோடி ரூபாய்) இலக்கை எட்ட அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன. மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் உதவியோடு, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி 10 - 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. - ராஜேஷ் அகர்வால் செயலர், மத்திய வர்த்தக அமைச்சகம்


 போர் பதற்றம் நிலவும் மேற்காசியாவுக்கான ஏற்றுமதி மற்றும் அங்கிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி ஆகிய இரண்டுமே குறைந்துள்ளன

 கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 28% குறைந்து ரூ.39,500 கோடி ரூபாயாகவும்; இறக்குமதி 32% சரிந்து ரூ.99,465 கோடி ரூபாயாகியுள்ளது

 கடந்த மாதம் கிட்டத்தட்ட 53,000 கோடி ரூபாய்க்கு தங்கமும்; 3,900 கோடி ரூபாய்க்கு வெள்ளியும் இறக்குமதி

 ஆண்டு ஒப்பீட்டில் தங்க இறக்குமதி 82 சதவீதமும்; வெள்ளி இறக்குமதி 157 சதவீதமும் அதிகரிப்பு.

சரக்கு வர்த்தகம் பிரிவு 2025 ஏப்ரல் 2026 ஏப்ரல் (ரூ. லட்சம் கோடி) ஏற்றுமதி 3.64 4.14 இறக்குமதி 6.21 6.84 பற்றாக்குறை 2.57 2.70



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us