ADDED : மார் 27, 2024 11:39 PM

புதுடில்லி: இண்டியா கூட்டணியில் காங்., எம்.பி., ராகுல் ஏப்.03-ம் தேதி வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்லிமென்ட் லோக்சபாவிற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் தேதியை அறிவித்து தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
இத்தேர்தலில் ‛‛இண்டியா'' கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய கட்சியான காங்., பல கட்டங்களாக வேட்பாளர்பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவிற்கு இரண்டாம் கட்டமாக ஏப். 26-ல் தேர்தல் நடக்கிறது. இதில் வயநாடு தொகுதி காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காங்.. எம்.பி., ராகுல், ஏப். 03-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 2019 தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

