காப்புரிமை வழக்கு ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு
காப்புரிமை வழக்கு ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு
ADDED : ஏப் 26, 2025 01:11 AM
புதுடில்லி:பாடல் காப்புரிமை விவகாரத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கோடி ரூபாய் செலுத்தும்படி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாடகர் பயாஸ் வாசிபுதின் தாகர், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வரும், வீர ராஜா வீரா பாடலில், என் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய, சிவ ஸ்துதி பாடலின் சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
'இதற்காக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் எங்களிடம் எந்த ஒரு அனுமதியையும் பெறவில்லை. எனவே, எங்களுக்குரிய இழப்பீட்டை தரும்படி படக்குழுவினருக்கு உத்தரவிட வேண்டும்' என்று, கூறியிருந்தார்.
இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த டில்லி உயர் நீதிமன்றம், 'தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருவதால், டிபாசிட் தொகையாக 2 கோடி ரூபாயை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு செலுத்த வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.

