நீங்க மட்டும் இளிச்சவாயனா? 'மாஜி'யை கொம்பு சீவும் கூட்டம்!
நீங்க மட்டும் இளிச்சவாயனா? 'மாஜி'யை கொம்பு சீவும் கூட்டம்!
ADDED : மார் 08, 2024 02:11 AM

'நீங்க மட்டும் என்ன இளிச்சவாயனா... நீங்களும் 'சீட்' கேளுங்க' என, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த் நியாமகவுடாவை, அவரது ஆதரவாளர்கள் கொம்புசீவி விட்டு உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாகல்கோட் தொகுதி, 'சீட்'டிற்கு காங்கிரசில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஹுனகுந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், வீரசைவ லிங்காயத் வளர்ச்சி ஆணைய தலைவருமான விஜயானந்த், 'எனது மனைவி வீணாவுக்கு தான் 'சீட்' கொடுக்கணும்.
இல்லன்னா நடக்குறதே வேற'ன்னு மிரட்டல் விட்டு இருக்காரு. இன்னும் நிறைய பேர் 'சீட்' கேட்டு இருக்காங்க.
பாகல்கோட் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு, அமைச்சர் பிரியங்க் கார்கேயிடம் இருந்தது. 'சீட்' கேட்டு வீணா உட்பட எட்டு பேர் விண்ணப்ப கடிதம் கொடுத்து இருக்காங்க. ஆனா, அந்த லிஸ்ட்லயே இல்லாத, இரண்டு பேரு இப்போ புதுசா சேர்ந்து இருக்காங்க.
சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் மகள் சம்யுக்தா, 'எனக்கு சீட் வேணும்'னு துண்டு போட்டு இருக்காரு. இவ்வளவு நாளா ஆட்டத்துல இல்லாத, முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த் நியாமகவுடாவும், இப்போ களத்துல குதிச்சு இருக்காரு.
'சம்யுக்தா, விஜயபுரா மாவட்டத்த சேர்ந்தவங்க. அவங்களே பாகல்கோட் சீட் கேட்கும்போது, மண்ணின் மைந்தனான நீங்க ஏன் சீட் கேட்கக் கூடாது. நீங்க என்ன இளிச்சவாயனா?' அப்படின்னு, ஆனந்த் நியாமகவுடாவுக்கு, அவரோட ஆதரவாளர்கள் கொம்புசீவி விட்டு இருக்காங்க.
'அப்படியா சொல்றீங்க... நாமும் ஒரு கை போட்டு பார்த்துருவோம்'னு, ஆனந்த் களம் இறங்கி இருக்காரு- நமது நிருபர் -.

