அர்ஜூன் பாண்டியனுக்கு சிறந்த கலெக்டருக்கான விருது
அர்ஜூன் பாண்டியனுக்கு சிறந்த கலெக்டருக்கான விருது
ADDED : பிப் 26, 2026 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: திருச்சூர் கலெக்டர் அர்ஜுன் பாண்டியனுக்கு கேரளாவின் சிறந்த மாவட்ட கலெக்டர் விருது, அம்மாநில வருவாய்த்துறை சார்பில் வழங்கப் பட்டது.
விழாவுக்கு கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் தலைமை வகித்தார். சபாநாயகர் சம்சீர் விருதுகளை வழங்கினார்.
உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர். அனில், வருவாய்த் துறை செயலாளர் எம்.ஜி. ராஜமாணிக்கம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டின் சிறந்த கலெக்டர் விருது திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் பாண்டியனுக்கு வழங்கப்பட்டது. அர்ஜுன் பாண்டியனின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் ஆகும். இவரது தந்தை பாண்டியன் இடுக்கி மாவட்டத்தில் ஏல தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்தவர். தாய் உஷா இடுக்கி மாவட்டத்தில் அங்கன்வாடி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

