ஆயுத கடத்தல் வழக்கு: லாலுவுக்கு ம.பி. கோர்ட் கைது வாரண்ட்
ஆயுத கடத்தல் வழக்கு: லாலுவுக்கு ம.பி. கோர்ட் கைது வாரண்ட்
UPDATED : ஏப் 06, 2024 10:18 PM
ADDED : ஏப் 06, 2024 09:00 PM

போபால்: ஆயுத கடத்தல் வழக்கில் ஆஜராகாத பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு எதிராக ம.பி. கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பீஹார் மாநிலத்தில் கடந்த 1995-97 ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ம.பி. மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த அங்கீகாரமில்லாத நிறுவனத்திடம் ஆவணங்கள் மூலம் ஆயுதங்களை வாங்கியதாக புகார் கூறப்பட்டது. இந்தர்கஞ்ச் போலீசார் லாலு உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ம.பி. மாநிலம் ஜபல்பூரில் கீழமை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.ஜபல்பூர் கீழமை கோர்ட் லாலுவுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இது குறித்து எம்.பி., எல்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் மனுவை விசாரித்த நீதிபதி மகேந்திரா சைனி, லாலுவுக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்தார்.

