ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு : தேர்தல் ஆணையம்
ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு : தேர்தல் ஆணையம்
UPDATED : மார் 19, 2024 11:03 PM
ADDED : மார் 19, 2024 08:05 PM

புதுடில்லி : தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதாவது: தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர் .அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் ஓட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். பி.எஸ்.என்,எல், மெட்ரோ உள்ளிட்ட இன்றியமையாத சேவைகளில் பணிபுரிவோர் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதற்காக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
யார் யாருக்கு தபால் ஓட்டு?
மெட்ரோ, ரயில்வே, பிஎஸ்என்எல், மின் ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தீயணைக்கும் படை, தபால் ஊழியர்கள், விமான போக்குவரத்து துறையினர், பேரிடர் மேலாண்மை துறை, தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடக ஊழியர்கள் ஆகியோர் தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி.

