கரசேவகர்கள் கைது : கர்நாடகாவில் பா.ஜ.வினர் கொந்தளிப்பு
கரசேவகர்கள் கைது : கர்நாடகாவில் பா.ஜ.வினர் கொந்தளிப்பு
UPDATED : ஜன 03, 2024 02:09 AM
ADDED : ஜன 03, 2024 12:11 AM

பெங்களூர்: கர்நாடகாவில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜ.வைச் சேர்ந்த ராமர் கோயில் கரசேவகர்கள் இருவர் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இங்கு ராமர்கோயில் கட்ட வேண்டி நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைந்து வரும் 22ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் பா.ஜ.வினர் இருவரை பழைய வழக்கு ஒன்றில் ஹூப்பாளி போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் கரசேவர்களாக இருந்தனர் என்பது தெரியவந்தது. 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.வினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் 60 வயதை கடந்துவிட்டனர். இது அரசியல் பழிவாங்கும் நோக்கில் கர்நாடகா காங்கிரஸ் அரசு செயல்படுவதாக புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கூறியது கைது செய்யப்பட்ட இருவர் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகி உள்ளார்கள். கலவர வழக்கில் பல ஆண்டுகளாக சிக்காமல் இருந்தனர். நீதிமன்ற விசாரணைகளிலும் அவர்கள் ஆஜராவில்லை. நீதிமன்றத்தால் கிடப்பில் உள்ள வழக்குகளாக கருதப்படுபவை.' என்றார்.