ADDED : செப் 21, 2024 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஜோதி நகர் பகுதி சேர்ந்தவர் ஆரோன், 29. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதி சேர்ந்த தியாகராஜன், 34, காந்தி, 40 ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, தியாகராஜன், காந்தி ஆகியோர் ஆரோனை தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஆரோனை உறவினர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து, தியாகராஜன், காந்தி ஆகியோரை கைது செய்தனர்.