ADDED : டிச 21, 2025 03:22 AM
ஸ்ரீநகர்: பாகிஸ்தானில் வசிக்கும் ஹிஜ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முகமது யூசுப் ஷாவுக்கு ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரன்டை பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதி முகமது யூசுப் ஷா, பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஜ்புல் முஜாஹிதினின் தலைவராக உள்ளார்.
கடந்த 1993ல் பாகிஸ்தானுக்கு தப்பிச்சென்ற இவரை, 2020ல் மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்தது.
தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள ஷா பல பயங்கரவாத அமைப்புகளின் கூட்டமைப்பான யுனைடெட் ஜிகாத் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.
பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கிறது.
இந்நிலையில் கைதாவதை தவிர்த்து வரும் ஷாவை பிடிக்க என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக நீதிமன்றம் ஜாமினில் வரமுடியாத கைது வாரன்டை பிறப்பித்துள்ளது.
