தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கன்றுக்குட்டிக்கு செயற்கை கால்

கன்றுக்குட்டிக்கு செயற்கை கால்

கன்றுக்குட்டிக்கு செயற்கை கால்


ADDED : பிப் 04, 2024 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2024 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில், ரயிலில் அடிபட்டு காலை இழந்த கன்றுக்குட்டிக்கு, செயற்கை கால் பொருத்தப்பட்டது.

தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோ சாலை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், மேய்ச்சலுக்கு பசுக்கள், கன்றுக்குட்டிகள் சென்றன. ரயில் தண்டவாளத்தில் சில கால்நடைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அவ்வழியாக வந்த ரயிலின் சத்தம் கேட்டு கால்நடைகள் ஓடின.

ஆனால், ஒரு கன்றுக்குட்டி மட்டும் ரயிலில் அடிபட்டு, பின்பக்கத்தின் இடது காலை இழந்தது. தகவல் அறிந்த அமைப்பினர், கன்றுக்குட்டியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்தனர்.

பின்பக்க காலை இழந்து நடக்க சிரமப்பட்ட கன்றுக்குட்டிக்கு, செயற்கை கால்கள் பொருத்த முடிவு செய்தனர். இது தொடர்பாக மகாவீர் மூட்டு மையத்தில் தொடர்பு கொண்டு, செயற்கை கால் பொருத்தினர். தற்போது கன்றுக்குட்டி, முன்பு போன்று நடக்க துவங்கி உள்ளது.

'கன்றுக்குட்டி வளர வளர, அதன் எடைக்கு ஏற்ப செயற்கை கால் மாற்றப்படும்' என அமைப்பினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us