ADDED : ஜன 18, 2024 04:08 PM

புதுடில்லி: ‛‛ அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த விரும்புவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அச்சமடைந்துள்ளார்'' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து கவுரவ் பாட்டியா கூறியதாவது: அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க விரும்பியது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் பயந்து போனது ஏன்?. அவர் அச்சமடைந்துள்ளார்.
சிறையில் இருக்கும் குற்றவாளி யார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி., சஞ்சய் சிங்கிற்கு அடுத்து கெஜ்ரிவால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் டி.என்.ஏ.,வில் அராஜக குணம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குற்றச்சாட்டு
இதற்கிடையே, ‛‛ அமலாக்கத்துறை எனக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் ஏன் திடீரென எனக்கு சம்மன் அனுப்புகிறார்கள்?. நான் பிரசாரம் செய்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம்'' என கெஜ்ரிவால் நிருபர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.