பா.ஜ., மீது பொய் குற்றச்சாட்டுகள் கூறும் கெஜ்ரிவால்: அனுராக் தாக்கூர்
பா.ஜ., மீது பொய் குற்றச்சாட்டுகள் கூறும் கெஜ்ரிவால்: அனுராக் தாக்கூர்
ADDED : பிப் 03, 2024 12:36 PM

புதுடில்லி: மதுபான ஊழலில் இருந்து பா.ஜ., மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் சுமத்தி வருகிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதாக கெஜ்ரிவால் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் ஆதாரங்களை கேட்டு டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., விலைக்கு வாங்கியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே அவர்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என்பதை போலீசாருக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் மீண்டும் ஒரு முறை அவரது பொய்கள் அம்பலப்படுத்தப்படும். மதுபான ஊழலில் இருந்து பா.ஜ., மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் சுமத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக துணை முதல்வரின் சகோதரரும், லோக்சபா எம்.பி.,யுமான டி.கே.சுரேஷ், 'மத்திய பட்ஜெட்டில் தென் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. 'இந்த நிலை நீடித்தால் தென் மாநிலங்களுக்கு என, தனி நாடு கேட்க வேண்டியிருக்கும்' என பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.தனி நாடு
இது குறித்த அனுராக் தாக்கூர் கூறுகையில், ''அவர்கள் நாட்டைப் பிரிக்க விரும்புகிறார்கள். நாட்டைப் பிரிக்க விடமாட்டோம். முதலில் மக்களின் பணத்தை அவர்கள் கொள்ளை அடிப்பதில் இருந்து மீட்டோம். இப்போது நாட்டை பிளவுபடாமல் காப்போம். என்றார்.
