உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 12, 2026 03:53 AM

அ நிறம் | அளவு
மும்பை: பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல திரைப்பட பின்னண பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லே, 92. திரைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஆஷா போஸ்லேவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாரடைப்பு காரணமாக ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
