உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 28, 2025 05:48 AM

அ நிறம் | அளவு
மூணாறு; கேரளாவில் ஆஷா பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை முன் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மூணாறில் காங்கிரஸ் மண்டல குழு தலைமையில் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மணி துவக்கி வைத்தார்.
காங்., மாவட்டப் பொதுச் செயலாளர் முனியாண்டி, மாவட்டக் குழு உறுப்பினர் கருப்பசாமி, ஒன்றியத் தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
