ADDED : நவ 12, 2024 10:02 PM

சித்ரதுர்கா, ; ''முதல்வர் சித்தராமையா பலவீனமானவர். காங்கிரஸ் அரசின் ஆயுட்காலம் விரைவில் முடியும்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறி உள்ளார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நான் தான் அடுத்த முதல்வர் என்று துணை முதல்வர் சிவகுமார் கூறுகிறார். ஆனால் சித்தராமையாவோ அடுத்த மூன்றரை ஆண்டுகளும், பதவியில் நீடிப்பேன் என்கிறார். அவர் பலவீனமாகி விட்டார். காங்கிரஸ் அரசின் ஆயுட்காலமும் விரைவில் முடிந்துவிடும்.
காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசை நாங்கள் கவிழ்க்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 14 பேர் தானாக ராஜினாமா செய்தனர். தற்போது காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகின்றன. இதுவரை எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு, ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதில் மும்முரமாக உள்ளனர். வளர்ச்சிப் பணிகள் ஒன்றும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

