காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய அசாம் எம்.எல்.ஏ., கைது
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய அசாம் எம்.எல்.ஏ., கைது
ADDED : ஏப் 24, 2025 07:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பஹல்காம் சம்பவத்துக்கு மத்திய அரசின் சதி தான் காரணம் என்று கூறிய, அசாம் எம்.எல்.ஏ., தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, அசாமை சேர்ந்த ஏ.ஐ.டி.யு.எப்., கட்சி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் என்பவர் பேசிய வீடியோ வெளியானது. அதில் அதில் தாக்குதல் சம்பவம் மத்திய அரசின் சதி என்று கூறி இருந்தார்.
இதை மிகவும் மோசமான தேச துரோக செயல் என்று கருதிய அசாம் அரசு அவரை கைது செய்துள்ளது. அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாக, மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.