ADDED : ஜன 30, 2025 07:10 AM
ராம்நகர்; ராம்நகர், பிடதியில் 20 வயது இளம் பெண் வசிக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மஞ்சூர் ஆலம், 26. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், இங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் மாலை, இளம் பெண் தனியாக இருந்தார். குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றார்.
இவர் தனியாக இருப்பதை கண்டு, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த மஞ்சூர் ஆலம், இளம் பெண்ணை பலவந்தமாக தன் வீட்டுக்கு இழுத்து வந்து, பாலியல் பலாத்காரம் செய்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் ஓடி வந்தனர். இவர்களை கண்ட மஞ்சூர் ஆலம், தப்பியோட முற்பட்ட போது, விரட்டி பிடித்தனர்.
அவரது அறையில் இருந்து, ரத்த காயங்களுடன் இளம்பெண் வெளியே வந்தார். அவர் நடந்து சென்ற வழிநெடுகிலும், ரத்தம் சிந்தியது. அவரது நிலையை கண்டு, உடனடியாக அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து அங்கு வந்த பிடதி போலீசாரிடம், மஞ்சூர் ஆலமை ஒப்படைத்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

