தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்

மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்

மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்


ADDED : அக் 08, 2024 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராய்ச்சூர் : குழந்தையை கடத்த வந்தவர் என்று நினைத்து, மனநலம் பாதித்த பெண்ணை மரத்தில் கட்டிவைத்து, மக்கள் தாக்கினர். அவரை போலீசார் மீட்டனர்.

ராய்ச்சூர் டவுன் மக்தல்பேட் பகுதியில், நேற்று காலையில், ஒரு பெண் சந்தேகம்படும்படி சுற்றினார். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த, இரண்டு குழந்தைகளின் அருகில் வந்து, குழந்தைகளை துாக்கிக் கொஞ்சினார்.

அங்கு வந்த குழந்தைகளின் பெற்றோர், பெண்ணிடம், 'நீங்கள் யார்?' என்று கேட்டனர். முன்னுக்கு பின் அந்த பெண் பேசியதால், குழந்தையை கடத்த வந்தவர் என்று நினைத்து, அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டிவைத்துத் தாக்கினர். அந்த வழியாக வந்த ரோந்து போலீசார், பெண்ணை மீட்டனர்.

காயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அந்த பெண், ராய்ச்சூர் அருகே வடவட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தது. அவரது குடும்பத்தினரை வரவழைத்து, 'இனி அந்த பெண்ணை வீட்டில் இருந்து வெளியே விட வேண்டாம். பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்' என்று அறிவுரை கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us