sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

13 மாநிலங்கள் 48 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்; பா.ஜ., அமோகம்

/

13 மாநிலங்கள் 48 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்; பா.ஜ., அமோகம்

13 மாநிலங்கள் 48 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்; பா.ஜ., அமோகம்

13 மாநிலங்கள் 48 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்; பா.ஜ., அமோகம்

2


UPDATED : நவ 23, 2024 08:23 PM

ADDED : நவ 23, 2024 11:31 AM

Google News

UPDATED : நவ 23, 2024 08:23 PM ADDED : நவ 23, 2024 11:31 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 48 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

13 மாநிலங்களில் உள்ள 48 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

உத்தரபிரதேசம் - 9 தொகுதிகள்,

மேற்குவங்கம்- 6 தொகுதிகள்,

ராஜஸ்தான் 7 தொகுதிகள்,

அசாம்-5 தொகுதிகள்,

பஞ்சாப் - 4 தொகுதிகள்

பீஹார்-4 தொகுதிகள்

கர்நாடகா-3 தொகுதிகள்

கேரளா- 2 தொகுதிகள்

குஜராத், உத்தரகண்ட், மேகலாயாவில் தலா 1 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

அசாம்


பா.ஜ., ஆளும் இம்மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

கடந்த முறை பா.ஜ., வெற்றி பெற்ற தோலாய், பெஹாலி ஆகிய தொகுதிகளில் இம்முறை அக்கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

சமகுரி தொகுதியை காங்கிரசிடம் இருந்து பா.ஜ., கைப்பற்றியது.

சித்லி தொகுதி யுபிபிஎல் கட்சியே இம்முறையும் தக்க வைத்துக்கொண்டது

பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் பொங்கைகோவான் தொகுதியை தக்க வைத்தது.

தொகுதியில் காங்கிரஸ் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.,வின் திப்லு ரஞ்சன் சர்மா வெற்றி பெற்றார்.

பீஹார்


ஐ.ஜ.த., பா.ஜ., கூட்டணி ஆளும் இம்மாநிலத்தில் முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார்.

இங்குள்ள தராரி தொகுதியில் சிபிஐ(எம்.எல்.) 2020 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.

ராம்கார்க்ஆர்ஜேடி.,யின் கோட்டையான இத்தொகுதியை தற்போது பா.ஜ., கைப்பற்றியது.

இமாம்கன்ஜ்பா.ஜ., கூட்டணியில் உள்ள எச்ஏஎம் தலைவர் ஜித்த்ராம் மஞ்சி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால் இமாம்கன்ஜ் காலியானது. தற்போது நடந்தஇடைத்தேர்தலில் அவரது கட்சியை சேர்ந்த தீபா குமாரி வெற்றி பெற்றார்.

பெலாகன்ஜ்ஆர்ஜேடி வசம் இருந்த இத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஐஜத., கைப்பற்றியது.

சத்தீஸ்கர்

பா.ஜ., ஆட்சி நடக்கும் இம்மாநிலத்தில் ராய்ப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆக இருந்த பா.ஜ.,வின் பிரிஜ் மோகன் அகர்வால் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு பா.ஜ.,வை சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.

குஜராத்தின் வாவ் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜினாமா செய்ததால் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.,வின் தாக்கூர் ஸ்வரூப்ஜி சர்தார்ஜி வெற்றி பெற்றார்.

கர்நாடகா


காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இம்மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

ஷிகோன்பா.ஜ., வசம் இருந்த இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

சண்டுர்

காங்கிரஸ் வசம் இருந்த இத்தொகுதியை, தற்போது நடந்த இடைத்தேர்தலிலும் அக்கட்சி தக்க வைத்துக் கொண்டது.

சென்னபட்டினம்மதசார்பற்ற ஜனதா தள கட்சி வசம் இருந்த இத்தொகுதியில் காங்கிரஸ் கைப்பற்றியது.

கேரளா

கேரளாவில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

காங்கிரஸ் வசம் இருந்த பாலக்காடு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

செலக்காரா தொகுதியில் சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி வைத்து இருந்தது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் சிபிஐ (எம்) கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ம.பி.,

பா.ஜ., ஆட்சி செய்யும் இம்மாநிலத்தில் இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில் காங்கிரஸ் வசம் இருந்த விஜய்பூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதால், இதனை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது.

மத்திய அமைச்சராக பதவியேற்றதால், சிவராஜ் சிங் சவுகான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால் புத்னி தொகுதி காலியானது. இங்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மேகாலயா


என்பிபி கட்சி ஆட்சி செய்யும் மேகாலயாவில் அக்கட்சி வசம் இருந்த கம்பெர்கெ தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இம்முறையும் என்பிபி கட்சியை சேர்ந்தவரே வெற்றி பெற்றார்.

பஞ்சாப்


ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாபில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

காங்கிரஸ் வசம் இருந்த தேரா நானக், சபேவல்,கிதர்பஹா ஆகிய தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது.

பர்னாலா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே தக்க வைத்துக் கொண்டது.

ராஜஸ்தான்


ராஜஸ்தானில் காலியான ஏழு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

காங்கிரஸ் வசம் இருந்த ஜன்ஜனு, ராம்கார்க், தியோலி உன்னிரா தொகுதியையும்,ராஷ்ட்ரீய லோக்தந்ரீக் கட்சி வசம் இருந்த கின்வ்சார் தொகுதியையும் பா.ஜ., கைப்பற்றியது

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சலும்பர் தொகுதியையும் பா.ஜ., இம்முறை தக்க வைத்தது.

கடந்த சட்டசபை தேர்தலில் தவுசா வெற்றி பெற்ற காங்கிரஸ், இம்முறையும் தக்க வைத்துக் கொண்டது.

பாரதி ஆதிவாசி கட்சி வசம் இருந்த சோரசி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார்.

சிக்கிம்


சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சி செய்யும் சிக்கிம் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

அக்கட்சி வசம் இருந்த சோரங் சகுங், நம்சி ஷின்கிதங் தொகுதிகளை அக்கட்சி தக்க வைத்து கொண்டது. அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

உ.பி.,


பா.ஜ., ஆட்சி செய்யும் உ.பி.,யில் 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

ராஷ்ட்ரீய லோக் தளம் வசம் இருந்த மீராப்பூர் தொகுதியை அக்கட்சி தக்க வைத்துக் கொண்டது

சமாஜ்வாதி வசம் இருந்த குந்தரகி, கதேஹரி ஆகிய தொகுதிகளையும், ஆம்தளம் கட்சியிடம் இருந்து மஜ்ஹவான் தொகுதியையும் கைப்பற்றிய பா.ஜ., காசியாபாத், கையர், புல்புர் ஆகிய தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டது. அங்கு ஆறு தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்ததால் காலியான கர்ஹால் தொகுதியை அக்கட்சியே தக்க வைத்தது. ஷிசாமாவு தொகுதியையும் அக்கட்சியே தக்க வைத்துக் கொண்டது.

உத்தரகண்ட்


பா.ஜ., ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இத்தொகுதியில் கடந்த முறை பா.ஜ., வெற்றி பெற்றது. இம்முறையும் அக்கட்சி வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டது.

மேற்கு வங்கம்


மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் இம்மாநிலத்தில் ஆறு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆறு தொகுதிகளிலும் அக்கட்சியே வெற்றி பெற்றது. சிடய், நய்ஹட்டி, ஹரோவா, மெதினிபுரி, தல்தங்ரா ஆகிய தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டதுடன், பா.ஜ., வசம் இருந்த மடரிஹட் தொகுதியை கைப்பற்றியது.






      Dinamalar
      Follow us