தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்


ADDED : செப் 28, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர், செப். 29–

ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம், எதிர்க்கட்சியான பா.ஜ.,வின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவு, 2019ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஜம்மு – காஷ்மீரில் உள்ள சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கும் ஜம்மு – காஷ்மீருக்கு உடனடியாக முழு மாநில அந்தஸ்து கோரி, சட்டசபையில் கடந்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பல உறுப்பினர்கள் பேச விரும்பியதால், அதன் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

ஜம்மு – காஷ்மீர் சட்டசபை நேற்று கூடியதும், மீண்டும் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர். இதனால், சட்டசபையில் அமளி ஏற்பட்ட நிலையிலும், குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து பா.ஜ., உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us