பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
ADDED : அக் 06, 2025 05:05 AM

பெங்களூரு: அடுக்குமாடி குடியிருப்பு வழங்குவதாக மக்களிடம் இருந்து, 927 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த பெங்களூரு தனியார் நிறுவனத்தின், 423.38 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹலசூரில், 'ஓசோன் அர்பானா இன்ப்ரா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு வழங்குவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து, 927.22 கோடி ரூபாய் வசூலித்தது.
ஆனால், குறிப்பிட்ட காலத்தில் வீடுகளை வழங்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை, தனிப்பட்ட நோக்கங்களுக்காக அந்நிறுவனம் பயன்படுத்தியது.
சட்டவிரோத பண பரிமாற்றமும் நடந்தது தெரியவந்ததால், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
நிறுவன உரிமையாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவானது.
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, நிறுவனத்திற்கு சொந்தமான, 10 இடங்களில் ஈ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில், இந்நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படாத, 92 வீடுகள், 'அக்வா 2' என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, 13 வீடுகள், 4.50 ஏக்கர் வணிக நிலம்; மூடிகெரேயின் கண்ணேஹள்ளி கி ராமத்தில் வாசுதேவன்.
அவரது மனைவி பெயரில் உள்ள, 179 ஏக்கர் நிலம் என, 423.38 கோடி ரூபாய் மதிப்பிலான, அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.