அஸ்வமேதா பஸ் போக்குவரத்து கே.எஸ்.ஆர்.டி.சி., அறிமுகம்
அஸ்வமேதா பஸ் போக்குவரத்து கே.எஸ்.ஆர்.டி.சி., அறிமுகம்
ADDED : பிப் 02, 2024 11:19 PM
பெங்களூரு: புதிய வடிவம் கொண்ட, பாயின்ட் டு பாயின்ட் எக்ஸ்பிரஸ் பஸ்சான, 'அஸ்வமேதா' பஸ் போக்குவரத்தை துவக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
புதிய வடிவம் மற்றும் ரகத்தின், 'அஸ்வமேதா கிளாசிக்' பஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. இது பாயின்ட் டு பாயின்ட் எக்ஸ்பிரஸ் பஸ்சாகும். 3.42 மீட்டர் உயரமான இந்த பஸ்சில், 52 இருக்கைகள் இருக்கும். இதன் முன்புற, பின்புற கண்ணாடிகள் விசாலமானவை. ஜன்னல் கண்ணாடிகள் உயர் தரமானது.
பஸ்சின் உட்புற லக்கேஜ் கேரியர், புது விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிரந்தரமாக எரியும் எல்.இ.டி., மின் விளக்குகள் உள்ளன. எல்.இ.டி., வழித்தட பலகை கொண்டுள்ளது. தானியங்கி கதவுகள், அவசர பட்டன் வசதியும் உள்ளன.
'அஸ்வமேதா' அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருக்கு நேரடி இணைப்பு ஏற்படுத்தும். முதல்வர் சித்தராமையா, பெங்களூரின் விதான்சவுதாவின், கிழக்கு நுழைவு வாசல் முன் வரும் 5ம் தேதி, அஸ்வமேதா பஸ்களின் போக்குவரத்தை துவக்கி வைப்பார்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

