டில்லியில் அடல் உணவகம்: 2நாளில் 33 ஆயிரம் பேர் வருகை
டில்லியில் அடல் உணவகம்: 2நாளில் 33 ஆயிரம் பேர் வருகை
ADDED : டிச 27, 2025 01:29 AM

புதுடில்லி: புதுடில்லியில் துவங்கப்பட்ட அடல் உணவகத்தில் உணவருந்துவதற்ககாக இரண்டு நாளில் சுமார் 33 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.
தொழிலாளர்கள், மற்றும் ஏழை மக்களுக்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரிவாஜ்பாய் நினைவாக அவரது பிறந்த நாளின் போது புதுடில்லி முழுவதும் 100 அடல் உணவகங்கள் அமைக்கப்படும் என மாநில முதல்வர் ரேகா குப்தா கூறி இருந்தார்.
அதன்படி வாஜ்பாய் பிறந்த நாளான டிச.,25-ம் தேதி 45 உணவகங்கள் துவங்கப்பட்டன. மீதமுள்ள 55 உணவகங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது.ரூ.5க்கு வழங்கப்படும் உணவில் அரிசி சாதம், சப்பாத்தி, காய்கறி மற்றும் ஊறுகாய் இடம்பெறுகின்றன. உணவகம் காலை 11 மணி முதல் 4 மணி வரையிலும் மாலையில்6 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் இயங்குகிறது.
முதல்நாள் திறப்பு விழாவின் போது 17,587 பேர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இவற்றில் 8,604 பேர் மதிய உணவிற்கும், 8,983 பேர் இரவு உணவிற்கும் வருகை தந்தனர்.
இரண்டாம்நாளில் 10,696 பேர் மதிய உணவிற்கும், 5,109 பேர் இரவு உணவுக்கும் வருகை தந்தனர்.இரண்டு நாட்களில் மொத்தம் 33,392 பேர் மானிய விலையில் உணவைப் பெற்றுக்கொண்டனர் என டில்லி அரசு வெளியி்ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

