கெஜ்ரிவாலை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி: டில்லி கவர்னர் புகழாரம்
கெஜ்ரிவாலை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி: டில்லி கவர்னர் புகழாரம்
ADDED : நவ 22, 2024 10:25 PM

புதுடில்லி: கெஜ்ரிவாலை விட டில்லி முதல்வர் அதிஷி ஆயிரம் மடங்கு சிறந்தவர் என டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா கூறியுள்ளார்.
டில்லி முதல்வராக கெஜ்ரிவால் இருந்த போது, அவருக்கும் துணைநிலை கவர்னருக்கும் மோதல் நீடித்து வந்தது. பல விவகாரங்களில் இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்றதால் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அமைச்சராக இருந்த அதிஷி முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலை.யில் நடந்த விழாவில் முதல்வர் அதிஷியுடன் இணைந்து துணைநிலை கவர்னர் சக்சேனா பங்கேற்றார்.
அப்போது சக்சேனா பேசும்போது, '' அதிஷி, அவருக்கு முன்பு முதல்வராக இருந்தவரை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்பதை உறுதியுடன் சொல்வேன்'', என்றார்.