ADDED : மே 06, 2024 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமேதி: உ .பி., மாநிலம் அமேதியில் உள்ள காங்., அலுவலகம் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேரு காலம் முதல் காங்கிரசில் அவர்களின் குடும்பத்தினரே அமேதியில் போட்டியிட்டு வந்தனர். பல ஆண்டுகளுக்குப்பின் இந்திரா குடும்பத்தினரை தவிர்த்து இந்த தொகுதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். சோனியாவுக்கு நெருக்கமானவர் இவர். இங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அமேதியில் உள்ள காங்., அலுவலகம் தாக்கப்பட்டது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உடைக்கப்பட்டன. இதில் காங்., தொண்டர்கள் சிலர் காயமுற்றனர்.
இது பா.ஜ., வின் அராஜகம் என காங்., செய்தி தொடர்பாளர் சுப்ரியா கண்டித்துள்ளார். தோல்வி பயத்தையே இது காட்டுகிறது என்றும் அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளார்.