தாயின் கள்ளத்தொடர்பை பார்த்த சிறுமி மீது தாக்குதல்
தாயின் கள்ளத்தொடர்பை பார்த்த சிறுமி மீது தாக்குதல்
ADDED : ஜன 07, 2024 02:34 AM
பெலகாவி : தாயின் கள்ளத்தொடர்பை பார்த்ததால், 9 வயது சிறுமி மீது தாக்குதல் நடந்துள்ளது. தாய் மீது சிறுமி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கலபுரகியில் தன் பெற்றோருடன் 9 வயது சிறுமி வசித்து வந்தார். இவரது தந்தை சில ஆண்டுக்கு முன்பு, சாலை விபத்தில் உயிரிழந்தார். அதன்பின், பெலகாவி, பைலஹொங்களாவின், பிரம்மாபுராவுக்கு வந்து தாயும், மகளும் வசிக்க துவங்கினர்.
சிறுமியின் தாய், அரசு சார்ந்த மாணவர் விடுதி ஒன்றில் வார்டனாக பணியாற்றுகிறார். இவருக்கும் கே.ஏ.எஸ்., அதிகாரி ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவ்வப்போது இவரது வீட்டுக்கு அதிகாரி வந்துள்ளார். தன் தாய் வேறு நபருடன், நெருக்கமாக இருப்பதை சிறுமி நேரில் பார்த்துள்ளார்.
இதை யாரிடமும் கூறக்கூடாது என, மிரட்டி தாயும், அதிகாரியும் சிறுமியை தாக்கி இம்சித்துள்ளனர். இவர்களின் கொடுமை அதிகரித்ததால், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பிரம்மாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவாகியுள்ளது.