ADDED : டிச 26, 2025 12:51 AM

கேரளாவில், கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல், துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான தாக்குதல், ஒட்டுமொத்த தேசத்தின் மீதான தாக்குதலுக்கு சமம். அனைத்து சமூகங்களின் கலாசாரம் மற்றும் மத மரபுகளுக்கு மரியாதை அளிப்பது கேரள அரசியலின் மாண்பு.
- சசி தரூர், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
பா.ஜ., ஆட்சியில் சாதாரணம்!
உ.பி., உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., செங்காரின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது, அக்கட்சியின் ஆட்சியில் சாதாரணமானது. மேலும், இதுபோன்ற முடிவுகளுக்கு எதிராகப் போராடுவது கூட தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
- மெகபூபா முப்தி, தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
நடவடிக்கை தேவை!
வங்கதேசத்தில் சமீப நாட்களாக இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிராக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே, மத்திய அரசு அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்; மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
- மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி

