தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வர்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது; மத்திய அரசு கண்டனம்

வர்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது; மத்திய அரசு கண்டனம்

வர்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது; மத்திய அரசு கண்டனம்


ADDED : நவ 28, 2026 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லியில் நடந்த ஐஓஆர்ஏ கூட்டமைப்பின் 23 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

அவர் பேசியதாவது:

சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும். வர்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு உலகளாவிய பதில் நடவடிக்கை தேவை.

புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கப்பல்கள் மீதான தாக்குதல்கள், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகியவற்றைத் தடுக்க சர்வதேச அளவிலான கூட்டு நடவடிக்கை அவசியம்.

இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us