மணல் கடத்தல் தடுக்க முயன்ற தாசில்தாரை கொல்ல முயற்சி
மணல் கடத்தல் தடுக்க முயன்ற தாசில்தாரை கொல்ல முயற்சி
ADDED : மார் 05, 2024 07:17 AM

ராம்நகர்: சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க முயன்ற, தாசில்தாரை லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற,
மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது.
ராம்நகர் மாவட்டம், ஹரோஹள்ளி தாலுகா பீமசந்திரா கிராமத்தில் கோசாலை உள்ளது.
அந்த கோசாலையின் அருகே உள்ள நிலத்தில் இருந்து, சட்டவிரோதமாக மணல் அள்ளி, லாரிகளில் கடத்தப்படுவதாக, ஹரோஹள்ளி தாசில்தார் விஜயண்ணாவுக்கு தகவல் கிடைத்தது.
பீமசந்திரா கிராமத்திற்குச் சென்ற அவர், மணல் அள்ளுவதைத் தடுக்க முயன்றார். அப்போது சிலர் அவர் மீது, லாரி ஏற்றிக் கொல்ல முயன்று உள்ளனர்.
இதுகுறித்த புகாரில் ஹரோஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 29ம் தேதி நடந்த சம்பவம், தாமதமாக தற்போது தான் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், 'காங்கிரஸ் ஆட்சியில் அரசு அதிகாரிகள் உயிருக்கே பாதுகாப்பு இல்லை' என, குற்றஞ்சாட்டி உள்ளது.

