மதமாற்றம் செய்ய முயற்சி; மருத்துவ மாணவர் மீது வழக்கு
மதமாற்றம் செய்ய முயற்சி; மருத்துவ மாணவர் மீது வழக்கு
ADDED : அக் 16, 2024 10:23 PM
கலபுரகி : மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை மதமாற்றம் செய்ய முயன்றதாக, மருத்துவ மாணவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
கலபுரகி டவுனில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை உள்ளது. இங்கு, கேரளாவை சேர்ந்த ஹினோ டாலிசன், 25 என்பவர் முதுநிலை மருத்துவம் படிக்கிறார்.
நேற்று முன்தினம் காலை மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு, கிறிஸ்துவ மதம் தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
'மருந்துகளும், ஊசிகளும் உங்கள் நோயை குணப்படுத்தாது. கிறிஸ்துவ மதத்திற்கு வாருங்கள். இயேசு உங்களை நோய்களில் இருந்து மீட்பார்' என்று கூறி மதமாற்றம் செய்ய முயன்றார்.
இது பற்றி அறிந்த ஹிந்து அமைப்பினர், மருத்துவமனைக்கு சென்று ஹினோ டாலிசனை பிடித்து, பல்கலைக்கழக போலீசில் ஒப்படைத்தனர். ஹிந்து அமைப்பினர் அளித்த புகாரில், ஹினோ டாலிசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.