தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஏர்போர்ட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் கைது

ஏர்போர்ட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் கைது

ஏர்போர்ட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் கைது


UPDATED : நவ 19, 2026 03:10 PM

ADDED : நவ 19, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 03:10 PM ADDED : நவ 19, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின், மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும், மூன்றாவது டெர்மினல் பகுதிக்குள் பலவந்தமாக நுழைய முயன்றவரை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உடனடியாக தடுத்து கைது செய்தனர்.

டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணியர், இந்த விமான நிலையத்தின் வழியாக வந்து செல்கின்றனர். இங்கு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலைய டெர்மினல் பகுதிக்குள் நுழையும் பயணியர், தங்களின் பயண ஆவணங்களையும், அடையாள அட்டைகளையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களிடம் காட்டி சரிபார்த்த பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுவர். விமான நிலைய ஊழியர்களும், அப்பகுதிக்குள் நுழையத் தங்களின் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.

நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியளவில், மூன்றாவது டெர்மினல் பகுதிக்குள், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பலவந்தமாக நுழைய முயன்றார். வாயிலில், பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகுாப்பு படை வீரர்கள், அந்த நபரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனாலும், அவர்களிடம் தப்பி, அந்த நபர் ஓட்டம் பிடித்தார். அவரை மடக்கிப்பிடித்த தொழில் பாதுகாப்பு படையினர், அவரது உடமைகளை சோதனையிட்டனர். அந்த நபரிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லை. அதே நேரம், சில அடையாள அட்டைகள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் அவரிடம் இருந்தன.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us